பதச் சேதம் | சொற் பொருள் |
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறைப்பு உற்று பொது மாதர்
| பெருக்க: மிகவும்; கந்தல்: கந்தை, ஒழுக்கக் கேடு; புந்தி: புத்தி; குறைப்பு உற்று: குறைபாட்டை அடைந்து; |
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே
| கலைக்குள்: லீலைகளுக்குள்; பட்சம் பிணித்து: அன்புகாட்டிப் பிணித்து; அணையாதே: தழுவாமல்; |
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டு உற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும்
| புரக்கைக்கு: காப்பதற்கு; புலத்துக் கண்: அறிவான கண், ஞானக் கண்; |
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே
| புலப்பட்டம்: புலவன் என்ற பட்டம்; கருத்தில் கண்: கருத்தை உடைய கண், ஞானக்கண்; |
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே
| தருக்கி: மனம் பூரித்து; தெண்டனிட்டு: விழுந்து வணங்கி; தண் புலத்தில்: குளிர்ச்சியான தினைப்புனத்தில்; சித்தம் தளர்வோனே: உள்ளம் உருகியவனே; |
சலிப்பு உற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன்
| சலிப்புற்று: சோர்வடைந்து; உரத்தில்: வலிமையில்; சம்ப்ரமித்து: களிப்புற்று; தன் சமர்த்தில்: தன் திறமையில்; சங்கரிக்க: சம்ஹரிக்க; தண்டிய சூரன்: வருத்திய சூரன்; |
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே
| குவட்டை: மலையை, கிரெளஞ்ச மலையை; |
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே.
| அற்க: நிலைபெற (அற்கா இயல்பிற்று செல்வம்—குறள்); அத்தம்: அர்த்தம், பொருள்; அத்தன்: அப்பன், தலைவன்; |
பெருக்கச் சஞ்சலித்துக் கந்தல் உற்றுப் புந்தி அற்றுப் பின் பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும்... (அடியேன்) மிகவும் சஞ்சலமடைந்து ஒழுக்கக் கேட்டைக் கொண்டவனாகி; புத்தி கெட்டுப்போய், பிழைக்கும் வழிகெட்டும் குறைபாடு உற்றும்;
பொது மாதர் ப்ரியப்பட்டு அங்கு அழைத்துத் தம் கலைக்குள் தங்கிடப் பட்சம் பிணித்துத் தம் தனத்தைத் தந்து அணையாதே... பொதுப்பெண்டில் என்னைப் பிரியத்தோடு தங்களிடம் அழைத்துத் தங்களுடைய லீலைகளுக்குள் நிற்கும்படியாகத் தங்களுடைய தனங்களைக் கொடுத்துத் தழுவாதபடி,
புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து எனக்குத் தொண்டு உறப் பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந்தமிழ் பாடும் புலப் பட்டம் கொடுத்தற்கும்... என்னைக் காப்பதற்காக உன்னுடைய திருவடிகளைத் தந்து; அடியேன் உனக்குத் தொண்டு செய்து உன்னைப் பற்றிக்கொள்ளும்படியான ஞானக்கண்ணாகிய அறிவுநிலை (எனக்குச்) செழித்து ஓங்குவதற்காகவும்; செந்தமிழிலே பாடுகின்ற புலவன் என்ற பட்டத்தை உலகத்தார் எனக்குக் கொடுப்பதற்காகவும்,
கருத்தில் கண் படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் புரிவாயே... அறிவுக்கண் பெற்றவன் என்ற புகழ்ச்சியை அடைவதற்கும் உன்னுடைய கிருபை நிறைந்த மனத்தால் புரிந்தருளவேண்டும்.
தருக்கிக் கண் களிக்கத் தெண்டனிட்டுத் தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புறச் சித்தம் தளர்வோனே... உள்ளம் பூரித்தும்; கண்கள் களிப்புறவும் தினைப்புனத்தில் விழுந்து வணங்கி, குறப்பெண்ணாகிய வள்ளியின்மேல் பெருகும் அன்பாலே உருகியவனே!
சலிப்பு உற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்துத் தன் சமர்த்தில் சங்கரிக்கத் தண்டிய சூரன்... (தேவர்களைச்) சோர்வடையச் செய்தும்; தன் வலிமையைக் காட்டியும்; தன் திறமையால் அவர்களை வருத்தியும் நின்ற சூரனுடைய,
சிரத்தைச் சென்று அறுத்துப் பந்தடித்துத் திண் குவட்டைக் கண்டு இடித்துச் செந்திலில் புக்கு அங்கு உறைவோனே... தலையை அறுத்துப் பந்தாடியும்; திண்மையான கிரெளஞ்ச மலையைக் கண்டு அதைப் பொடியாக்கியும் திருச்செந்தூருக்கு வந்து அங்கே வீற்றிருப்பவனே!
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திருச் சிற்றம்பலத்து அத்தன் செவிக்குப் பண்பு உறச் செப்பும் பெருமாளே.... (எல்லோரும்) மேம்பாட்டை அடையும்படியான அஞ்செழுத்தான (நமசிவாய என்ற) பிரணவத்தின் பொருளை, தில்லையிலே நடமாடும் தந்தையான சிவனாருடைய செவியில் முறைப்படிச் சொல்லியருளிய பெருமாளே!
சுருக்க உரை
குறமகளாகிய வள்ளி காத்துக்கொண்டிருந்த தினைப்புனத்தில் உள்ளம் பூரிக்கவும் கண் களிக்கும்படியாகவும் விழுந்து வணங்கி அவர்மேல் பெருகும் அன்பால் உள்ளம் உருகியவனே! தேவர்களைச் சோர்வடையச் செய்தும்; தன் வலிமையால் களிப்புற்று எழுந்தும்; தன் வலிமையால் அவர்களைத் துன்புறுத்தியும் வந்த சூரனுடைய தலையை அறுத்தும் பந்தாடியும்; வலியதான கிரெளஞ்ச மலையைத் தூளடித்தும் திருச்செந்தூரில் வந்து எழுந்தருளியிருப்பவனே! அனைவரும் மேம்படும்படியாக அஞ்செழுத்தான பிரணவத்தின் பொருளைச் சிற்றம்பலத்தில் நடனமாடும் சிவனாருடைய செவியில் முறைப்படிச் சொல்லியருளிய பெருமாளே!
அடியேன் பெரிதும் சஞ்சலமுற்றும்; ஒழுக்கக் கேட்டை அடைந்தும்; புத்தி கெட்டும்; பிழைக்கும் வழி அற்றுப்போயும்; குறைபாடுகளை அடைந்து; பொதுமகளிர் என்னிடத்திலே அன்புகாட்டித் தங்களிடம் அழைத்து தங்களுடைய வலைக்குள்ளே சிக்கும்படியாகத் தனங்களைத் தந்து தழுவிக்கொள்ளாதபடி என்னைக் காப்பதற்காக உன் திருவடியைத் தந்தும்; அடியேன் உன்னைப் பற்றிக்கொள்ளும்படியான அறிவு நிலையைத் தந்தும்; உன்னைப் போற்றிப் பாடுவதால் ‘செந்தமிழ் பாடும் புலவன்’ என்று அனைவரும் பட்டமளிக்கவும்; ‘ஞானக்கண் பெற்றவன்’ என்ற புகழ்மொழியை அடியேன் அடைவதற்கும் உன்னுடைய அருள்நிறைந்த மனத்தால் தந்துதவ வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

