உபதேசம் செய்தருளவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் வயலூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், (கணக்கில் வராத) ஒரு மெல்லொற்று என்ற விதத்தில் அமைந்துள்ளன.
தனதன தானான தானந் தனதன தானான தானந்
தனதன தானான தானந் தனதான
அரிமரு கோனேந மோவென் றறுதியி லானேந மோவென்
றறுமுக வேளேந மோவென் றுனபாதம்
அரகர சேயேந மோவென் றிமையவர் வாழ்வேந மோவென்
றருணசொ ரூபாந மோவென் றுளதாசை
பரிபுர பாதாசு ரேசன் றருமக ணாதாவ ராவின்
பகைமயில் வேலாயு தாடம் பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாப தீயென்
களமிசை தானேறி யேயஞ் சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூராழி மேவும் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


