மனோலய அனுபூதி—மனம் ஒடுங்கிய சமாதி அனுபூதி—நிலையை வேண்டுகின்ற இந்தப் பாடல் விராலி மலைக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 33 எழுத்துகளைக் கொண்ட பாடல். இப்பாடலில் ஒன்று முதல் ஐந்து வரை எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கெழுத்துகளும்; ஒவ்வொரு சீரிலும் இரண்டாம் எழுத்து நெடிலாகவும்; ஆறாம் சீரில் இரண்டாமெழுத்து நெடிலாக அமைந்திருப்பினும் இதில் மட்டும் ஐந்தெழுத்துகளும் பயில்வதைக் காணலாம்.
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக லடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர நதிசூடி
நிசாசர குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


