‘என்னை ஆண்டருள்’ என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் திருச்செந்திலுக்கானது.
ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு நெடில் என்று இரண்டு இரண்டு எழுத்துகளால் அமைந்துள்ள ஆறு சீர்களையும் ஒரு தொங்கல் சீரையும் கொண்ட பாடல். அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டிருக்கிறது. திரும்பத் திரும்பச் சுழன்று பயிலும் மெல்லொற்று இனிமையான சந்தத்தைத் தருகிறது.
தந்தா னந்தா தந்தா னந்தா
தந்தா னந்தா தனதான
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தார் செந்திற் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


