புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ‘அத்திக்கரை’ என்னும் தலத்துக்குரிய இந்தப் பாடல் முக்தியடையும் வரத்தைக் கோருகிறது. சந்தத்தில் ஓரளவுக்கு ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற முதற்பாடலை ஒத்தது இது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள்; தொங்கல் சீரை ஒழித்து மற்ற எல்லாச் சீர்களிலும் குற்றெழுத்துகளே—நெடில் இல்லை. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் இரண்டு வல்லொற்றுகளுடன் கூடிய நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு வல்லொற்றுகளுடன் கூடிய இரண்டு குற்றெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் எந்த நான்கு குற்றெழுத்துகளையும் உடையவை.
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதான
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
சுற்றிக்கல னிட்டுக் கடிதரு
சொக்குப்புலி யப்பிப் புகழுறு களியாலே
சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
சொற்றப்பிய கத்தைப் புரிபுல
சுற்றத்துட னுற்றிப் புவியிடை யலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலை
கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்
முத்தர்க்கடி மைப்பட் டிலகிய அறிவாலே
முத்தித்தவ சுற்றுக் கதியுறு
சத்தைத்தெரி சித்துக் கரையகல்
முத்திப்புண ரிக்குட் புகவர மருள்வாயே
திக்கெட்டும டக்கிக் கடவுள
ருக்குப்பணி கற்பித் தருளறு
சித்தத்தொட டுத்துப் படைகொடு பொருசூரர்
செச்சைப்புய மற்றுப் புகவொரு
சத்திப்படை விட்டுச் சுரர்பதி
சித்தத்துயர் கெட்டுப் பதிபெற அருள்வோனே
அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
அச்சத்தையொ ழித்துக் கரிவரும்
அத்தத்தி லழைத்துப் பரிவுட னணைவோனே
அப்பைப்பிறை யைக்கட் டியசடை
அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
அத்திக்கரை யிச்சித் துறைதரு பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

