திருப்போரூருக்கான இன்றைய பாடல் முழுவதுமே துதிகளால் ஆனது. எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காதது.
அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளை உடைய இந்தப் பாடலில் எல்லாச் சீர்களிலுமே சம அளவிலாக மூன்று மூன்று எழுத்துகள் பயின்றாலும் அவற்றுள்ளும் வேறுபாடு பயில்கிறது. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் உள்ள மூன்றெழுத்துகளும் குற்றெழுத்துகள்; இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களிலும் மூன்றெழுத்துகள் பயின்றாலும் இவற்றில் முதலெழுத்து நெடில்; மற்ற இரண்டும் குறில்.
தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி தருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவ மாமக ளாசைகொள் மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

