‘நல்ல வழிகளில் போகின்ற அறிவை எனக்கு அருள்வாய்’ என்று வேண்டுகிற இந்தப் பாடல் வயலூருக்கானது. இதில் ‘அலம் அலம்’ என்ற சொற்கள் திரும்பத் திரும்பப் பயில்கின்றன. ‘அலம்’ என்றால் ‘துன்பம்’ என்பது பொருள். இவையெல்லாம் துன்பமாக இருக்கும் காரணத்தால் ‘போதும் போதும்’ என்று சொல்வதாகப் பலர் பொருள் கண்டிருந்தாலும் ‘அலம்’ என்ற சொல்லுக்குப் ‘போதும்’ என்ற பொருள் இல்லை. இவையெல்லாம் ‘துன்பம் துன்பம்’ என்று சொல்வதாகவும் பொருள் காணலாம்.
சற்றே நீளமான இந்தச் சந்த அமைப்பில் அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகள் உள்ளன; அனைத்துமே குற்றெழுத்துகள். ஒவ்வோரடியிலும் ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் மட்டும் மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; மற்ற எல்லாச் சீர்களுமே நான்கு குற்றெழுத்துகளைக் கொண்டவை.
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன தனதான
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலவு பலபணி பரிமள மறுசுவை மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகிய
தொலைவி லுனைநினை பவருற வலதினி யயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
முறவு மலமல மருளலை கடல்கழி
துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
விகட இறகுகள் பறையிட அலகைகள் நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணென
விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
வுருளு முரலொடு தவழரி மருகசெ
வனச மலர்சுனை புலிநுழை முழையுடை யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
வயலி நகரியி லிறையவ அருள்தரு பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

