இறைவனுடைய திருவடியைச் சேர்ந்து வாழும் வாழ்வைக் கோரும் இப்பாடல் மதுரைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளைக் கொண்டவை; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும், கணக்கில் சேராத இரண்டாம் எழுத்து வல்லொற்றாகவும் அமையப்பெற்றவை.
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த குருநாதா
தானவர்கு லத்தை வாள்கொடுது ணித்த
சால்சதுர்மி குத்த திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடுசி றக்க அருள்வாயே
வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
மாமயில்ந டத்து முருகோனே
தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
சேரமரு வுற்ற திரள்தோளா
தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
வேல்கொடுத ணித்த பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

