‘உன் திருவடிகளைப் போற்றிப் பாடுவதற்கான சொற்களைத் தந்தருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. ‘முத்தா முத்தி அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்று ஒரே மகுடத்தோடு முடிவடையும் பதினோரு பாடல்களில் இது பத்தாவது பாடல்.
அமைப்பு முறையில் அவற்றைப் போலவே இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில். ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் தனதான
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
வித்தா ரத்திற் பலகாலும்
வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
வித்தா சைச்சொற் களையோதிக்
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
ரைப்போ லக்கற் பழியாதுன்
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
டற்கே நற்சொற் றருவாயே
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
முற்பால் வெற்பிற் புனமானைப்
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா
தத்தாள் பற்றிப் புகல்வோனே
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
வைத்தார் முத்தச் சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


