‘பெரும் ஆசைச் செயல்களுக்கு ஆளாகி நான் துன்பப்படாமல் தடுத்தாள வேண்டும்’ என்று கோருகின்ற இந்தப் பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. ‘முத்தா முத்தி அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்று ஒரே மகுடத்தோடு முடிவடையும் பதினோரு பாடல்களில் இது பதினோராவது பாடல்.
அமைப்பு முறையில் அவற்றைப் போலவே இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில். ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் தனதான
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
தப்பே சிப்பொற் கனிவாயின்
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ
ணைப்பூண் வெற்பிற் றுகில்சாயக்
கற்பா லெக்கா வுட்கோ லிக்கா
சுக்கே கைக்குத் திடுமாதர்
கட்கே பட்டே நெட்டா சைப்பா
டுற்றே கட்டப் படுவேனோ
சொற்கோ லத்தே நற்கா லைச்சே
விப்பார் சித்தத் துறைவோனே
தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர்
விக்கா முக்கத் தொடும்வேலா
முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்
முத்தாள் முத்தச் சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


