பிறப்பும் இறப்புமாகச் சுழல்கின்ற பிறவிப் பிணி போய்த் தொலைய வேண்டுகின்ற இந்தத் திருப்புகழ் திருவண்ணாமலைக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற நான்கெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இரண்டெழுத்துகளையும் கணக்கில் சேராத ஒரு வல்லொற்றையும் கொண்டவை.
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் தனதான
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித் தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச் சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக் கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச் சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக் கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் தம்பிரானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


