பொதுமகளிரால் வருகின்ற துன்பம் நீங்கவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருப்பரங்குன்றுக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூனறெழுத்துகளும்; மூன்று-நான்கு, ஏழு-எட்டு, பதினொன்று-பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன,
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன தனதான
கறுக்கு மஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதர பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு மிடறூடே
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே
நிரைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கொ ழம்பொடு குருதிகள் சொரிதர அடுதீரா
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு மிளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி

எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


