‘உனது திருவடிகளை நினைக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 23 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடில், ஒரு குறில் என மூனறெழுத்துகளும்; ஆறாம் சீரில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தனன தனதன தனன
தானான தந்த தனதான
மகரம துகெட இருகுமி ழடைசி
வாரார்ச ரங்க ளெனநீளும்
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
வாணாள டங்க வருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப மிசைவாவிப்
படிமன துனது பரிபுர சரண
பாதார விந்த நினையாதோ
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல் பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியு
நாராய ணன்றன் மருகோனே
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி யவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருது
மாரூர மர்ந்த பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

