‘உன்னுடைய திருவடி மலரை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவாரூக்குப் போகும் வழியில் இருக்கும் விஜயபுரம் என்னும் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளை உடைய பாடல் இது. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்று எழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய மலமாசு
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெ யழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு முயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல ரடைவேனோ
இடமற மண்டுநி சாசர ரடையம டிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி வறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர் பதியுளி லங்கவி டாதர
எழில்பட மொன்றுமொ ராயிர முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்தபு ராரிம தனகோபர்
விழியினில் வந்துப கீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


