‘என்னிடத்திலுள்ள தீமைகள் அறுவதற்கு, ‘அஞ்சேல்’ என்று அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று மூன்று எழுத்துகளே அமைந்திருந்தாலும் இவை அமைப்பில் மாறுபட்டவை. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனத்தந் தானன தனத்தந் தானன
தனத்தந் தானன தனதான
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு முடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென அருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


