‘உனது திருவடிகளை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 32 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், மூனறு குறில், இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகள் என நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தாந்ததந்த தனதன தாந்ததந்த
தனதன தாந்ததந்த தனதான
இருவினை யூண்பசும்பை கருவிளை கூன்குடம்பை
யிடரடை பாழ்ம்பொதும்ப கிதவாரி
இடைதிரி சோங்குகந்த மதுவது தேங்குகும்ப
மிரவிடை து|ங்குகின்ற பிணநோவுக்
குருவியல் பாண்டமஞ்சு மருவிய கூண்டுநெஞ்சொ
டுயிர்குடி போங்குரம்பை யழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொழிந்து
னுபயப தாம்புயங்க ளடைவேனோ
அருணையி லோங்குதுங்க சிகரக ராம்புயங்க
ளமரர் குழாங்குவிந்து தொழவாழும்
அடியவர் பாங்கபண்டு புகலகி லாண்டமுண்ட
அபிநவ சார்ங்ககண்டன் மருகோனே
கருணைம்ரு கேந்த்ரஅன்ப ருடனுர கேந்த்ரர்கண்ட
கடவுள்ந டேந்த்ரர்மைந்த வரைசாடுங்
கலபக கேந்த்ரதந்த்ர அரசநி சேந்த்ரகந்த
கரகுலி சேந்த்ரர்தங்கள் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


