‘பொதுப் பெண்டிரின் மயக்கம் அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வீரை நகருக்கு உரியது. வீரை நகர் என்பது திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத்தலம். இப்பாடல் பழநித் திருப்புகழ்ப் பாடல்களின் வரிசையில் வருகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தானா தனதன தானா தனதன
தானா தனதன தனதான
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு மொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி குழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிரு குழை யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு திறலோனே
வேதா வுடனொடு மாலா னவனறி
யாதா ரருளிய குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


