‘உன் திருவடியைச் சூட்டியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளையும் ஐந்து சீர்களையும் கொண்ட பாடல். ஒன்று, இரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு மூன்று ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடிலும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும் அமைந்திருக்கின்றன.
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் தனதானா
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
கூன்போந் தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
கோண்பூண் டமையாதே
பொடிவன பரசம யத்துத் தப்பிப்
போந்தேன் தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
பூண்டாண் டருள்வாயே
துடிபட அலகைள் கைக்கொட் டிட்டுச்
சூழ்ந்தாங் குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்கத் திக்குத்
தோந்தாந் தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
பாழ்ங்கான் தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
பாங்காம் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


