சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(03.04.1986)அரசு அலுவலகங்களில் மீண்டும் ஆறு நாள் வேலை முறை வருமா? அமைச்சர் நெடுஞ்செழியன் பதில்

அரசு அலுவலகங்களில் வாரத்துக்கு ஆறு நாள்கள் வேலை திட்டத்தை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவது குறித்து வருகிற ஜூன் மாதத்துக்குப் பிறகு பரிசீலனை செய்து தக்க முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

Updated On :2 ஏப்ரல் 2015, 10:55 am

அரசு அலுவலகங்களில் வாரத்துக்கு ஆறு நாள்கள் வேலை திட்டத்தை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவது குறித்து வருகிற ஜூன் மாதத்துக்குப் பிறகு பரிசீலனை செய்து தக்க முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இது சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் இருந்துதான் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை திட்டம் அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டது. இது எப்படி செயல்படுகிறது என்பதை ஓராண்டு காலம் நடைமுறைக்கு பிறகு பரிசீலிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். உடனடியாக பழையபடி ஆறு நாள் வேலை திட்டத்தை அமலுக்குக் கொண்டுவரும் யோசனை இல்லை.

வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்ததை அடுத்து அரசு அலுவலர்களின் பணி நேரமும் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வியாழன் அல்லது செவ்வாயன்று பொது அல்லது தேசிய விடுமுறை வந்தால் முதல் நாளோ அல்லது மறுநாளோ லீவ் போட்டுவிட்டுச் சென்றுவிடும் நிலை இருக்கத்தான் செய்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியமே என்று அமைச்சர் சொன்னார்.

எனவே, ஓராண்டு கால நடைமுறை அனுபவத்துக்குப் பிறகு இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்று நெடுஞ்செழியன் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.