காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தலையிட்டுவருவது, இந்தியாவுக்கு எதிரான பிரகடனம் செய்யப்படாத யுத்தமே. இதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான், மறைமுகமாக இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தை நடத்திவருகிறது. காஷ்மீர் பிரச்னையில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், இந்தியா பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை. பாகிஸ்தான் நடத்திவரும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை அழித்தே ஆக வேண்டும். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் வழிகளை மூட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில் கடுமையாகக் கூறியுள்ளது.
எல்லைப் பகுதிகளை மூட வேண்டும், காஷ்மீர் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ள நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கோருகிறது.
காஷ்மீர் பிரச்னையைப் பொருத்தமட்டில், எதிரிகளின் பிராந்தியத்துக்குள் ஊடுருவித் தாக்கும் கொள்கையைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே என்று அத்தீர்மானம் கூறுகிறது.
தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பெரும் அச்சுருத்தலாக இருந்துவரும் இந்த விஷயத்தில், அரசு உரிய அளவுக்கு விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை என்றும் பாரதீய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமானால், அதற்கு முன்பு, பிரிவினைவாத சக்திகளை முற்றிலும் முறியடிக்க வேண்டும். இல்லையெனில், காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி வெற்றிபெறாது என்று அத்தீர்மானம் கூறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

