திமுக ஆட்சிக்கு எதிரான ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, இவர்களுடன்தான் கூட்டணி, அவர்களுடன் கூட்டணி இல்லை என்கிற எந்த முடிவுக்கும் நாங்கள் இன்னும் வரவில்லை. திறந்த மனதுடன் உள்ளோம் என்றார் அவர்.
அதிமுக தலைமைக் கழகத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி -
திமுகவுக்கு எதிராக அதிமுகவும் மதிமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என அதிமுக அவைத் தலைவர் நெடுஞ்செழியன் பேசியது அரசியல் விழாவில் அல்ல. நூல் திறனாய்வுக் கூட்டத்தில் - இலக்கிய விழாவில் அவ்வாறு பேசியுள்ளார். அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. அவர் சொன்னதை வரவேற்கிறேன்.
இது தொடர்பாக, மதிமுகவைச் சேர்ந்தவர்களோ, வேறு யாராவதோ என்னைச் சந்தித்தனரா என்பதைப் பற்றி இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை. நேரம் வரும்போது தெரிவிப்பேன்.
எங்களுடைய பொது எதிரி யார் என்பதைப் பார்க்க வேண்டும். திமுகதான் எங்களது பொது - பிரதான எதிரி. தனிப்பட்ட அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் இப்படிச் சொல்லவில்லை.
திமுக ஆட்சி மக்களுக்கு எதிரான, விரோதமான ஆட்சி என்கிற ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கடந்த காலத்தில் மதிமுக பேசியிருக்கலாம். அது கடந்தகால வரலாறு. இப்போது பேசவில்லை. பாமகவினர்கூட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். மேலும் திமுகவுடன் சேர்ந்திருந்தபோது அவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.
எக்கட்சியையும் தீண்டத்தகாதவர்கள் என நாங்கள் கூறவில்லை. போட்டி அதிமுக என யாரையும் எந்த அமைப்பையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இருப்பது ஒரே அதிமுகதான். அது எங்களது அதிமுகதான். எங்களை விட்டுப் பிரிந்துபோனவர்களுக்கு ஏற்கெனவே நான் அழைப்பு விடுத்துள்ளேன். அதற்குப் பிறகு நிறைய பேர் மீண்டும் அதிமுகவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
எங்களை விட்டு வெளியே போனவர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரையும் சேர்த்துக்கொள்வோம். அந்த ஓரிருவர் யார் என்பதை நீங்களே (பத்திரிகையாளர்களே) புரிந்துகொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

