சென்னையில் உள்ள வீடுகளின் நிலைமை என்பது பற்றி ஸ்ரீ எஸ்.ஆர்.வெங்கட்டராமன் பிரசங்கம் செய்தார்.
1931-ம் வருஷம் ஜனத்தொகை கணக்கெடுத்ததில் சென்னையில் 1,20,000 பேர்களுக்கும் அதிகமாக ஜனங்கள் வசிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. இத்தனை ஜனங்களுக்கும் வீடுகள், சாலைகள், தண்ணீர் சப்ளை போன்ற வசதிகள் இல்லை. இத்தனை அதிகப்படியான ஜனங்களுக்கும் சென்ற 10 வருஷ காலமாக 9000 வீடுகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன.
1921-ம் வருஷத்திற்கப்புறம் 13 பேருக்கு ஒரு வீடு என்று கணக்கு விவரத்தில் தெரியவருகிறது. 1931-ம் வருஷத்தில் சென்னை நகர ஜனத் தொகை 6,47,000. 1931-ம் வருஷத்தில் 74,000 வீடுகள் இருந்ததாக கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, ஒரு வீட்டில் 8.8 நபர்கள் வசிப்பதாகத் தெரிகிறது. ஆனால், மாகாண சராசரி விகிதம் ஒரு வீட்டிற்கு 5 பேர்கள் தான் வசிக்கலாம். புரசவாக்கம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை போன்ற இடங்களில் மட்டும் 70,000 பேர்கள் வசிக்கின்றனர். இங்கு ஜனத்தொகை பெருகிவிட்டது.
நகரத்தில் உள்ளவர்களை நான்கு தினுசாகப் பிரிக்கலாம்.
வீடில்லாத தொழிலாளர்கள். இவர்கள் திறந்த வெளிகளிலும், பொதுக் கட்டிடங்களின் திண்ணைகளிலும் வசிக்கிறவர்கள்.
இரண்டாவது சேரிகள். நகரத்தில் 189 சேரிகள் இருக்கின்றன. இவைகளில் நகரத்தின் ஜனத்தொகை நாலில் ஒரு பங்கு ஜனங்கள் வசிக்கின்றனர். இந்த சேரிகளில் மொத்தம் 146 சேரிகள் தனிப்பட்ட நிலச் சுவான்தார்களைச் சேர்ந்தது. இவர்கள் இச்சேரிகள் விஷயமாக அலட்சியமாக இருக்கின்றனர். இந்தச் சேரிகள் சகல அம்சத்திலும் மோசமாக இருக்கின்றன. இங்கு நாய்கள்கூட வசிக்கக் கூச்சப்படும். கணக்கு பார்த்ததில் 262 பேர்கள் உள்ள 55 குடும்பத்தினர் 14 வீடுகளில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு வீட்டிலும் 29 பேர்கள் அடங்கிய 4 குடும்பத்தினர் வசிக்கின்றனர். வீட்டில் வெளிச்சம் நாஸ்தி. சுகாதார முறைப்படி வாசஸ்தலத்திற்கு யோக்கியதையல்ல.
மூன்றாவதாக ரூ.35 முதல் ரூ.100 வரை சம்பளம் வாங்கும் குமாஸ்தாக்கள் மற்றவர்கள் போன்றவர்கள் வசிக்குமிடம். இவர்கள் வாசஸ்தலமும் ரொம்ப மோசமாக இருக்கிறது.
கடைசியாக பிச்சைக்காரர்கள்.
சென்னைக் கார்ப்பரேஷன் வீட்டு விஷயமாகப் பரிசீலனை செய்ய ஒரு கமிட்டி நியமித்தது. இதன் சிபார்சுப்படிக்கு 10 வருஷ காலத்திற்கு சேரிகள் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் செலவழிக்க வேண்டுமென்றும், மத்ய தர வகுப்பினர் வசிப்பதற்காக இரண்டரை கோடி ரூபாய் செலவழித்து வாசஸ்தலங்கள் அமைக்க வேண்டுமென்றும் கமிட்டியினர் சிபார்சு செய்திருந்தனர். இந்த சிபார்சுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
ரயில்வே, டிராம்வே கம்பெனி போன்றவர்கள் அவர்களுடைய சிப்பந்திங்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது நலமாக இருக்கும். கூட்டுறவு முறையின் மூலம் மேலும் பல வீடுகள் அமைப்பதை நாம் உற்சாகமளிக்க வேண்டும். இதைத் தவிர நகரத்தை சுற்றிலும் நகரத்தைச் சேர்ந்த கிராமங்கள் அமைக்க வேண்டும். இவைகளுக்கும் நகரத்திற்கும் போக்குவரத்து இருக்கும்படிச் செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

