சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(19.04.1938)மில்லை திறக்காதே, ஜாக்கிரதை - மதுரை மில் மேனேஜர் மீது 144 பிரயோகம்

மதுரை மில்காரர்கள் தம் அறிக்கைப்படி ஆலையைத் திறக்கக்கூடாதென்று மதுரை அடிஷனல் ஜில்லா மாஜிஸ்டிரேட் ஸ்ரீ டி.எஸ்.ராஜமய்யா, மதுரை மில் நிர்வாகிகளுக்கு 144-வது பிரிவின் கீழ் ஒரு தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Updated On :18 ஏப்ரல் 2015, 9:55 am

மதுரை மில்காரர்கள் தம் அறிக்கைப்படி ஆலையைத் திறக்கக்கூடாதென்று மதுரை அடிஷனல் ஜில்லா மாஜிஸ்டிரேட் ஸ்ரீ டி.எஸ்.ராஜமய்யா, மதுரை மில் நிர்வாகிகளுக்கு 144-வது பிரிவின் கீழ் ஒரு தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எங்கே அமைக்குப் பங்கம் உண்டாகிறதோ என்ற அச்சத்தின் மீதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்று, மதுரை மில் நிர்வாகிகள் ஒரு நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். அதில், மார்ச் 26-ம் தேதி தாங்கள் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளைப் போன்ற துறையிலேயே நாளை மதுரையில் உள்ள மில் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாஜிஸ்டிரேட் உத்தரவு பூரா விவரம் -

மதுரையில் உள்ள மதுரை மில் அடைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால் சுமார் 12,000 தொழிலாளர்கள் சுமார் 3 மாதங்களாக வேலையற்றிருக்கின்றனர். இதன் விளைவாக, மானேஜராகிய தாங்கள் 1938-வது வருஷம், ஏப்ரல் 20-ல் மீண்டும் ஆலை திறக்கப்படுமென்று ஒரு நோட்டீஸை விடுத்தீர்கள். இந்த நோட்டீஸில் ஆலை திறக்கப்படுவதற்கு சில நிபந்தனைகளையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

இவற்றில் ஒரு நிபந்தனைப்படி, 2 வருஷத்திற்குக் குறைந்த சர்வீசுள்ள தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது. இதன்படி 3000 தொழிலாளர்கள் வேலயற்றுப் போகின்றனர்.

ஆக, நிறுவப்பட்டிருக்கும் விசாரணை கோர்ட்டின் தீர்ப்புக்காகக் காத்திராமல், எல்லா தொழிலாளர்களையும் வேலைக்கு எடுத்துக்கொள்வதாக நிர்வாகிகள் உறுதி கூறாமல், குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு ஆலையைத் திறப்பதானது, மிகவும் அபாயகரமான நிலைமைக்கே கொண்டு வந்துவிடும். நிச்சயமாய் மறியல் நடத்தப்படும். இதை எந்த உத்திரவும் தடை செய்ய முடியாது. இதன் பயனாக போலீஸார் பலாத்காரத்தை உபயோகப்படுத்தும் படியான அவசியமேற்படும்.

மதுரை மில்லை இந்த சந்தர்ப்பங்களிடையில் திறப்பதானது அமைதிக்குப் பங்கமேற்படலாம். கலகம் அல்லது கலாட்டா நடக்கலாம். ஆதலின், துரிதமான பரிகாரமும், தடுப்பும் விரும்பத்தக்கனவாதலின், இபிகோ 144-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க போதிய இடமிருக்கிறது என்பதே என் அபிப்பிராயம்.

ஆக, பிரஸ்தாப மதுரை மில்லை 1938-வது வருஷம் ஏப்ரல் 20 அன்றே அல்லது அன்றைய தினத்திலிருந்து ஒரு மாதத்துக்குட்பட்ட நாட்களிலோ திறக்கக்கூடாதென, மதுரை மில் கம்பெனி லிமிடெட் மானேஜரும் சேர்மனுமான ஸ்ரீ ஜே.எம்.டோக்குக்கும், அவரது உத்திரவுக்குட்பட்ட இதர உத்தியோகஸ்தர்களுக்கும் நான் உத்தரவிடுகிறேன்.

அவசரத்தின் காரணமாகவும் இந்த உத்திரவு எவர்களுக்காகப் பிறப்பிக்கப்பட்டதோ அவர்களுக்கு முன்னறிவிப்புச் செய்ய சந்தர்ப்பங்கள் அனுமதிக்காததாலும், இந்த தடை உத்திரவு எக்ஸ்பார்ட்டியாகவே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக வாபஸ் பெறப்பட்டாலொழிய இந்த உத்திரவு ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.