தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(20.04.1939)வகுப்பு முறையில் தேசத்தின் எல்லைகளை வகுக்க முடியாது - உலகத்தில் எங்கும் இது நடந்ததில்லை: ஜின்னாவின் யோசனைக்கு கண்டனம்

வகுப்பு முறையில் தேசத்தின் எல்லைகளை வகுக்க முடியாது - உலகத்தில் எங்கும் இது நடந்ததில்லை: ஜின்னாவின் யோசனைக்கு கண்டனம்

Updated On :18 ஏப்ரல் 2015, 9:57 am

வகுப்பு முறையில் தேசத்தின் எல்லைகளை வகுக்க முடியாது. ஏனென்றால், எந்த தேசத்தின் எல்லையும் வகுப்பு முறையில் வகுக்கப்பட்டதில்லை. அம்மாதிரி வகுக்கப்பட்டிருந்தால், அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு முஸ்லிம்கள் வந்திருக்க முடியாது.

உலகத்தில் உள்ள 60 கோடி முஸ்லிம்களைக் கொண்ட தனி அரசாங்கம் நிறுவ முடியுமா? முடியாது. எந்த மதத்தையும் ஆதாரமாகக் கொண்டு உலகில் எந்த பாகத்திலும் தனி அரசாங்கம் நிறுவப்படவில்லை என்று ஆவூர் ரேஞ்சு அரசியல் மாநாட்டு வரவேற்பு கமிட்டி தலைவர் ஸ்ரீ கமெ.பக்கீர் முகம்மது பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது:

பெரும்பாலும் கிருஸ்துவர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை வளர்ப்பதற்காக போராடுகின்றன. மதத்தின் பேரில் நிறுவப்படும் அரசாங்கங்களை எந்த தேசத்தாரும் விரும்பமாட்டார்கள். இந்தியாவைப் பிரிப்பதால் முஸ்லிம்களுக்கோ, ஹிந்துக்களுக்கோ அல்லது வேலு மைனாரிட்டிகளுக்கோ நன்மை ஏற்படப் போவதில்லை. ஆகையால் ஏகாதிபத்யத்தை அகற்ற விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் அரசியல் நிர்ணய சபை கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மெஜாரிட்டியார் மைனாரிட்டியார் பரஸ்பரம் நல்லெண்ணத்தால்தான் வாழ முடியுமென்றும், பிரிவினையால் முஸ்லிம்களுக்கு அதிக சலுகையோ சௌகர்யமோ எதுவும் கிடைக்காது. அரசியல் நிர்ணய சபையின் போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.