மகாத்மா காந்தி இன்று பூரண ஓய்வுடனிருந்தார். மாலையில் மொரார்ஜி மாளிகையில் அவர் பிரார்த்தனை செய்தபோது, ஜனங்கள் ஏராளமாகக் கூடினர். அநேகர் நீண்ட தூரத்தில் இருந்து வந்தவர்கள்.
பிரார்த்தனை முடிந்ததும் மகாத்மா காந்தி பேசுகையில், நாம் ஏகாந்தமாகவும் மன அமைதியுடனும் இருக்க தம்மை விடும்படி ஜனங்களைக் கேட்டுக்கொண்டார்,
உல்லாச வாசத்திற்காக நான் இங்கு வரவில்லை. நான் மேலும் அதிக வேலை செய்யும் பொருட்டு பலம் தேடிக்கொள்ளவும் எனது ஆரோக்கியத்தை அபிவிருத்தி செய்துகொள்ளவுமே இங்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.
தீண்டாமையை நீக்க ஜனங்கள் விரும்பினால் ஹரிஜன நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டுமென்றார்.
தூர தொலைவிலிருந்து வருகிறவர்களின் நன்மைக்காக மாலையில் சீக்கிரமாகவே இனி பிரார்த்தனை நடக்குமென்று அறிவித்துவிட்டு காந்திஜி கூறியதாவது - பிரார்த்தனைக்கு வருகிறவர்கள், பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் விருப்பத்துடனே வர வேண்டும். என்னை வேடிக்கை பார்ப்பதற்காக வரக்கூடாது.
தற்போது செய்துள்ள ஏற்பாட்டின் மகாத்மா, மஹாபலேசுவரத்தில் சுமார் ஒன்றரை மாதம் தங்குவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

