சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (27.04.1952) பரஸ்பர நம்பிக்கை, சர்க்காருடன் ஒத்துழைப்பு, நல்லொழுக்கம் ஆகியவைதான் மக்கள் முன்னேற மூன்று வழிகள் - ராஜாஜி

மதுரை நகர சபையினர் அளித்த வரவேற்புக்கு ராஜாஜி நன்றி தெரிவித்துப் பேசியதாவது -

News image
Updated On :24 ஏப்ரல் 2015, 12:20 pm


மதுரை நகர சபையினர் அளித்த வரவேற்புக்கு ராஜாஜி நன்றி தெரிவித்துப் பேசியதாவது -

சர்க்காருடன் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவையே வெற்றிக்கு மார்க்கம். எனக்கு இவ்வளவு கோலாகல வரவேற்பு அளிக்க நீங்கள் ஏற்பாடு செய்தீர்கள். ஆயினும் நான் என்னை மதுரைவாசியாகவே கருதுகிறேன். என்னிடம் உங்களுக்கு உள்ள அன்பையும் அபிமானத்தையும் இந்த வரவேற்பு ரூபத்தில் நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். இதற்கு நான் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது.

சிலர் சூழ்ச்சி செய்து என்னை இந்தப் பதவியில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள். ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பிய நான் இந்தப் பொறுப்பை ஏற்று நிறைவேற்றத் தயங்கினேன். ஆயினும், மக்கள் அன்போடு என்னுடன் ஒத்துழைத்தால் ஏதாவது நல்லது செய்ய முடியும் என்று நினைக்கிறேன். பிறகு எல்லாம் சுலபமாய்ப் போய்விடும். கஷ்டமே இருக்காது.

ஒழுக்கத்துடனும் நாணயத்துடனும் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், அதன் மூலம் எல்லோருக்கும் நன்மை விளையும். பரஸ்பர நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகியவையே வெற்றிக்கு மார்க்கங்கள்.

இப்போதைய விலைவாசிகள், இதர சந்தர்ப்பங்கள் காரணமாக நகர சபைகளின் திட்டங்களை நிறைவேற்ற இயலவில்லை. ஆகவே, நிலைமை மாறும் வரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

நம் நாடு முழுதும் ஒரே அரசாங்கத்தின் கீழ் இருக்கிறது. அதேபோல் நிதி விஷயத்திலும் நாடு ஒரே உறுப்பாய் இருக்கிறது. அத்தனால், மத்திய சர்க்கார் வகுக்கும் திட்டங்களை அனுசரித்தே நாம் நடக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.