சினிமா சட்டத் திருத்த மசோதா மீது ராஜாங்க சபையில் விவாதம் நடைபெற்றது. அதில், ஹாலிவுட் படங்களைக் காப்பியடிப்பதால் நம் நல்ல பெண்பாடுகள் கெடுவதாக பெண் அங்கத்தினர்கள் பலர் ஒருமித்த புகார் தெரிவித்தனர். அத்துடன், பலாத்கார, காமவெறியூட்டும் படங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் சபையில் அதிக விவாதமின்றிக் கால் மணி நேரத்தில் நிறைவேறிய சினிமா சட்ட (திருத்த) மசோதா மீது இன்று ராஜாங்க சபையில் எதிர்பாராதவிதமாக நீண்ட விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் 7 பெண் அங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டமான படங்களால் கலாசாரப் பண்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். இவ்விதப் படங்களால் குழந்தைகள் கெட்டுப்போவதாகவும் அவர்கள் கூறினர்.
நாட்டில் ஏற்கெனவே பலாத்கார, காமவெறிகளை ஊட்டக்கூடிய படங்கள் வெளிவந்துள்ளன என்று கூறி அநேகமாகப் பேசிய அனைவரும் கண்டித்தனர். மட்டமான ஹாலிவுட் படங்களை இந்தியப் படாதிபதிகள் காப்பியடிப்பதைக் கண்டிப்பதில் கம்யூனிஸ்ட் அங்கத்தினருடன் காங்கிரஸ் அங்கத்தினரும் சேர்ந்துகொண்டனர்.
சினிமா படத் தயாரிப்பில் ரஷிய முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சர்க்காரே படங்கள் தயாரிக்க வேண்டும் என்றும், நல்ல படங்களைத் தயாரிப்பதற்காக நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றும் ஸ்ரீ.என்.ஜி. ரங்கா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

