ராக்கெட்டில் ஒருவர் உட்கார்ந்து சந்திர மண்டலத்துக்கு விஜயம் செய்வதென்பது இன்னும் பத்து வருஷங்களில் சாத்தியமாகிவிடும் என்று பிரிட்டிஷ் வான ஆராய்ச்சி சங்கத்தைச் சேர்ந்த கென்னத் காட்லண்ட் குறிப்பிட்டார்.
ஆள் இல்லாமல் வெறும் ராக்கெட்டை மட்டுமே சந்திர மண்டலத்துக்கு அனுப்ப இன்னும் ஐந்து வருஷங்களுக்குள்ளேயே சாத்தியமாகிவிடலாம் என்றும் அவர் அபிப்பிராயம் தெரிவித்தார்.
ராக்கெட் ஒன்றை மணிக்கு 25000 மைல் வேகத்தில் செல்லும்படி வழி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அதைப் பூமியின் ஆகர்ஷண சக்தி எதுவும் செய்ய முடியாது.
சந்திர ஆகர்ஷண சக்தி பிரதேசத்துக்குள் நுழைந்ததும் ராக்கெட்டை சந்திரனை சுற்றி வட்டமாகச் செலுத்தி சந்திர ஆகர்ஷண சக்தியை சிறுகச் சிறுக சமாளிக்கவேண்டி இருக்கும். இப்படிச் செய்யும்போது பூமிக்கு டெலிவிஷன் மூலம் சந்திர மண்டலத்தில் உள்ளவற்றை எல்லாம் காட்ட வழி செய்ய முடியும்.
ஒரு ஆள் ஏறிச் செல்லும் ராக்கெட்டில் திரும்பி வருவதற்கான வழிகளும் செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


