சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (14.08.1954) - ராஜாஜி, ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன் மூவருக்கும் பாரத ரத்னா பட்டங்கள்; எம்.எஸ். சுப்புலட்சுமிக்கும் கௌரவம் - ஜனாதிபதியின் சுதந்தர தின பட்டமளிப்பு

ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார், உதவி ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.வி. ராமன் ஆகிய மூவருக்கும் ஜனாதிபதி பாரத ரத்னா என்ற கௌரவ விருதை வழங்கியிருக்கிறார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2015, 12:00 pm

ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார், உதவி ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.வி. ராமன் ஆகிய மூவருக்கும் ஜனாதிபதி பாரத ரத்னா என்ற கௌரவ விருதை வழங்கியிருக்கிறார்.

மிகவும் உயர்ந்த இந்த கௌரவத்தின் சின்னம் வட்ட வடிவமான ஒரு தங்கப் பதக்கம்.

இதைத் தவிர, பத்ம விபூஷண் என்ற கௌரவம் வழங்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களும் கெஜட்டில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் -

ஸ்ரீ பி.ஜி.கேர், ஸ்ரீ வி.கே.கிருஷ்ண மேனன், பிரபல சைத்ரீகர் ஸ்ரீ நந்தலால் போஸ், டாக்டர் சத்யேந்திர நாத் போஸ், டாக்டர் ஜாகிர் உசேன்.

ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ராமன் ஆகிய மூவருக்கும்தான் பாரத ரத்னா என்ற விருது முதல் முதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கவி வள்ளத்தோல், ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோருக்கு பத்ம விபூஷண் (இரண்டாவது) விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரபல கார்ட்டூன் சித்திரக்காரரான ஸ்ரீ சங்கர் பிள்ளைக்கு (சந்தர் பத்ம விபூஷண் (மூன்றாவது வகுப்பு) அளிக்கப்பட்டிருக்கிறது.

காண்ட்லா துறைமுக திட்ட அபிவிருத்தி கமிஷனர் ஸ்ரீ ஜி.எம். கணபதி அய்யர், டாக்டர் ஜே.எஸ். கிருஷ்ணன் (டில்லி), டாக்டர் லட்சுமண சுவாமி முதலியார், வி. நரஹரி ராவ், ஸ்ரீமதி ஆஷா தேவி அரியநாயகம், ஸ்ரீமதி அச்சம்மா மத்தாய், எம். சோமப்பா ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.