சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (16.08.1956) - வில்லிவாக்கம் அருகில் அட்டகாசம் செய்த சிறுத்தை சுட்டுக்கொல்லப்பட்டது

சென்னை வில்லிவாக்கம் அருகே மாதானங்குப்பத்தில் கொழுத்த சிறுத்தை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. சிறுத்தை, 8 அடி நீளமும் 3 அடி உயரமும் இருந்தது. ஒரு எருமையைக் கொன்று, இரு கிராமவாசிகளை அபாயகரமாக அடித்துப்போட்ட சிறுத்தை கொல்லப்பட்டது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2015, 12:02 pm

சென்னை வில்லிவாக்கம் அருகே மாதானங்குப்பத்தில் கொழுத்த சிறுத்தை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. சிறுத்தை, 8 அடி நீளமும் 3 அடி உயரமும் இருந்தது. ஒரு எருமையைக் கொன்று, இரு கிராமவாசிகளை அபாயகரமாக அடித்துப்போட்ட சிறுத்தை கொல்லப்பட்டது.

சிறுத்தையால் அடிக்கப்பட்ட இருவரும் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வில்லிவாக்கம் கிராமத்துக்கு அருகில் காடு ஏதும் இல்லாததால், சிறுத்தை எப்படி எங்கிருந்து வந்தது என்பது விந்தையாக இருக்கிறது.

சிறுத்தையை முதலில் துணி வியாபாரியான குப்புசாமி செட்டி பார்த்ததாகத் தெரிகிறது. ஊர் ஊராக துணி வியாபாரம் செய்யும் அவர், சிறுத்தையைப் பார்த்ததும் மெள்ள தப்பியோடிவிட முயன்றார். ஆனால், அதற்குள் சிறுத்தையின் பிடிக்குள் சிக்கினார். அவரைப் புரட்டியது. அவர் கூக்குரலெழுப்பி அக்கம் பக்கத்து உதவி கோரினார். அவருடைய பெருத்த குரல் கேட்ட சிறுத்தை சற்று பிடியைத் தளர்த்தியது. துணி வியாபாரி தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஒரே ஓட்டம் பிடித்தார்.

தகவல் எட்டியவுடன் வில்லிவாக்கம் போலீஸஸர் ஆயுதங்கள் சகிதம் சிறுத்தை இருந்த இடத்துக்கு விரைந்தனர்.

இதற்கிடையில் அங்கு என்ற சிகாரி தணிகாசலம், சிறுத்தையைச் சுட்டார். அது காயமடைந்து விழுந்தது. அச் சமயத்தில், கிராமவாசி ஜெயவேலு பெரிய தடியால் சிறுத்தையை பலமாக ஓங்கி அடித்தார்.

சினம் தாங்கவில்லை. ஜெயவேலுவின் மீது தாவிப் பாய்ந்தது. அவரை ஓங்கி அடித்து காயப்படுத்தியது.

இத் தருணத்தில் போலீஸ் படை வந்து சேர்ந்தது. சிறுத்தையை நோக்கிக் குறி வைத்தனர். அதற்குள் சிறுத்தை, தணிகாசலத்தின் மீது பாய்வதற்கு முயன்றது. தணிகாசலம் முந்திக்கொண்டார். சிறுத்தை எழும்புவதற்குள் சுட்டார். சிறுத்தை செத்து விழுந்தது.

காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திருக்கு கொண்டுபோகப்பட்டனர். சுடப்பட்ட சிறுத்தை, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகப்பட்டது. மனிதர்களைத் தாக்குவதற்கு முன் சிறுத்தை ஒரு எருமையைப் பலியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.