சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (23.08.1964) - இந்திய மக்களை ஒன்றுபடுத்தவல்லது ஹிந்தியே - உப ராஷ்டிரபதி ஜாகிர் உசேன் வலியுறுத்தல்

பல மொழிகள் பேசப்படும் இந்திய மக்களிடையே அந்த மொழிகளில் எதையும் அழிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குப் பொதுமொழியாக இருப்பதற்குரிய தகுதியும் சிறப்பும் வாய்ந்த மொழி ஹிந்தியே என்று உப ராஷ்டிரபதி ஜாகிர் உசேன் குறிப்பிட்டார்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2015, 7:59 am

பல மொழிகள் பேசப்படும் இந்திய மக்களிடையே அந்த மொழிகளில் எதையும் அழிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குப் பொதுமொழியாக இருப்பதற்குரிய தகுதியும் சிறப்பும் வாய்ந்த மொழி ஹிந்தியே என்று உப ராஷ்டிரபதி ஜாகிர் உசேன் குறிப்பிட்டார்.

ஹிந்தியைப் பிரசாரம் செய்வது கடினமான வேலைதான். எனினும் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியப் பணியாகும். இந்தியாவில் பல்வேறு மொழிகளும் கலாசாரங்களும் பழக்க வழக்கங்களும் உள்ளன.

ஆகவே, நாட்டின் பல்வேறு அலுவல்களையும் ஒன்றுபட்ட முயற்சி மூலமாகத்தான் செய்ய முடியும். தேசிய மொழி மூலமே நாட்டின் தேசிய சக்திகளை ஒன்றுபடுத்த முடியும்.

ராஜ்ய ஹிந்தி பிரசார சபை, ஹிந்தியைப் பரப்புவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஹிந்தி, ஐக்கியத்தை உண்டுபண்ணும் மொழியே அன்றி, ஐக்கியத்தைச் சிதைக்கும் மொழியல்ல.

பிராந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் ஹிந்து சத்ருவல்ல. அந்நிய மொழியாகிய ஆங்கிலத்தை அகற்றுவதுதான் ஹிந்தியைத் தேசிய மொழியாக்குவதன் நோக்கமாகும்.

பல்வேறு பிரதேச மொழிகளை ஒரு அழகான அணிகலனாக பின்னுவதற்கு ஹிந்தியைச் சிறந்த தேசிய முயற்சியாகக் கொள்ள வேண்டும். ஹிந்தி பல்வேறு தேசிய மொழிகளின் இணைப்பு மொழியாக விளங்க வேண்டும். பிராந்திய மொழிகளுக்கு ஹிந்தி தீங்கிழைக்க முடியாது. தீங்கிழைக்கவும் செய்யாது.

ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்காத பெருமக்களின் முழு ஆதரவும் இன்றி, ஹிந்தி வளர்ச்சி அடைய முடியாது. இங்குதான் ஹிந்தி பிரசாரகர்களுக்கு மிகவும் பொறுப்பு இருக்கிறது. பொறுமை, அன்பு, ஆர்வம் முதலியவற்றின் மூலமாக ஹிந்தி பிரசாரகர்கள் தமது பணியைச் செய்ய வேண்டும். அவர்கள் சுலபமான ஹிந்தியை உபயோகப்படுத்த வேண்டும். கடினமான ஹிந்தி சொற்களைப் உபயோகப்படுத்தக்கூடாது. அவர்கள் கடின ஹிந்தி சொற்களை உபயோகித்தால் ஹிந்தியிடம் வெறுப்பு உணர்ச்சிதான் ஏற்படும்.

ஹிந்தி தெரியாத பிரதேசங்களில் சாதாரண மக்களுக்கும் புரியக்கூடிய சுலபமான எளிய ஹிந்தியை உபயோகிக்க வேண்டியது அவசியம் என்றார் ஜாகிர் உசேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.