சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (31.08.1974) - 1974-ம் ஆண்டின் மகஸேஸே விருது பெற்றார் எம்.எஸ்.சுப்புலட்சுமி

ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, 1974-ம் ஆண்டுக்கான ராமோன் மகஸேஸே பரிசைப் பெற்றார்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2015, 11:56 am

ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, 1974-ம் ஆண்டுக்கான ராமோன் மகஸேஸே பரிசைப் பெற்றார்.

ஆசியாவில் சிறந்த சேவைக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற விருது இது.

ஸ்ரீமதி எம்.எஸ். இந்த விருதைப் பெறுகையில், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி ஆகியோர் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினார். தனக்குக் கிடைத்த பெருமை அனைத்துக்கும் தனது கணவர் டி.சதாசிவமே காரணம் என்றார்.

காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் அவர் தமது அஞ்சலியைச் செலுத்தினார்.

ரொக்கப் பரிசு 10 ஆயிரம் அமெரிக்க டாலரை அவர் இந்தியாவில் உள்ள மூன்று கலாசார, மனிதாபிமான ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

காலஞ்சென்ற ராமோன் மகஸேஸே குணாதிசயங்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாராட்டினார். பேசுவதற்கு முன் அவர் பிரார்த்தனைக் கீதம் ஒன்றைப் பாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.