எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அன்ன ஆகாரம் ஏதும் இல்லாமலே, ஓர் இளம்பெண் உயிர் வாழ்ந்து வருகிறாள். வெறும் தண்ணீர் மட்டுமே அவள் குடிக்கிறாள்.
அந்தப் பெண்ணின் பெயர் நார்தேவி. இப்போது அவளது வயது 21. ஹிமாசலப் பிரதேசத்தில், சம்பா மாவட்டத்தில், தீசா தாலுக்காவில் சாஜோடே என்ற கிராமத்தில் அந்தப் பெண் வசிக்கிறாள்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் அவளுக்கு பயங்கர தலைவலி ஏற்பட்டது. சுமார் ஒரு மாத காலத்துக்கு இந்தத் தலைவலி நீடித்தது. இந்த ஒரு மாதத்தில் அவள் தூங்கவே இல்லை. அதன் பிறகு அவளுக்குப் பசி என்னும் உணர்வே இல்லாமல் போய்விட்டதாம்.
அதன் பிறகு அவளுக்கு சாப்பாடே பிடிக்கவில்லை. அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் குடிப்பதோடு சரி. அவளது பெற்றோர் அவளை வலுக் கட்டாயப்படுத்தி கொஞ்சம் உணவு கொடுத்து பார்த்தனர். அப்போதெல்லாம் அவள் மயக்கமாக விழுந்து விட்டாள். அதையடுத்து இரண்டு தினங்களுக்கு அவளுக்குக் கண் தெரியவில்லையாம். காதும் கேட்கவில்லையாம்.
எனவே, ஆனது ஆகட்டும் என்று அவளைச் சும்மாவே விட்டுவிட்டார்கள். இப்போது எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவள் இப்படியே அன்ன ஆகாரமின்றி இருந்து வருகிறாள்.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவளை ஒரு 'பெண் பேய்' என்றே நினைத்து அஞ்சுகின்றனர். வாலிபர்களோ அவளை 'மோகினிப் பேய்' என்கின்றனர். குழந்தைகளுக்கும் அவள் பேரைச் சொன்னாலே பயம். நோயாளிகள் தூங்கும்போது இவள் அவர்களது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர் வாழ்வதாக பயங்கர வதந்தி நிலவுகிறது.
இந்தத் தகவல்களை தர்மசாலா அரசினர் கலைக் கல்லூரி பேராசிரியர் பலராம் வர்மானி தெரிவித்தார்.
அந்தப் பெண்ணைப் பற்றி தாம் பலமுறை கேள்விப்பட்டதாகவும், பின்பு தாமே சிலருடன் சென்று பார்த்ததாவும் அவர் கூறினார். இந்த அதிசயப் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து ஆராய்ச்சி செய்யலாம் என்று அவர் யோசனை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


