தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (06.07.1978) பெரிய பங்களா வீடுகளில் நூதன முறையில் திருடிய பலே திருடன் பிடிபட்டான்

மதுரையைச் சேர்ந்த பலே திருடனை போலீஸார் கைது செய்தனர். அந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க நூதன முறைகளைக் கையாண்டு வந்ததாகவும், திருச்சியில் பல வீடுகளில் புகுந்து தன் கைவரிசையை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News image
Updated On :2 ஜூலை 2015, 12:15 pm

மதுரையைச் சேர்ந்த பலே திருடனை போலீஸார் கைது செய்தனர்.

அந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க நூதன முறைகளைக் கையாண்டு வந்ததாகவும், திருச்சியில் பல வீடுகளில் புகுந்து தன் கைவரிசையை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்கு இரு குழந்தைகளைக் கூட்டிச் செல்வாராம். வரும் வழியில் தனது மனைவி இறந்துவிட்டதாகவும், இந்த இரு குழந்தைகளும் தனது குழந்தைகள் என்றும் மனைவியின் உடலை அடக்கம் செய்ய பணம் தேவை என்றும் கூறுவாராம்.

வீட்டுப் பெண்மணி சிறிது பணம் கொடுப்பதற்காக உள்ளே செல்லும் சமயத்தில் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் நகைகளையும் மேலும் அங்கு கையில் அகப்படும் விலை உயர்ந்த பொருள்களையும் களவாடிக்கொண்டு ஓடிவிடுவாராம்.

திருச்சியில் ஒரு வீட்டில் அவ்வாறு திருட முயலும்போது அந்த ஆசாமி பிடிபட்டான். திருச்சியில் மட்டும் ஒன்பது வீடுகளில் அந்த ஆசாமி அவ்வாறு திருடியதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.