தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(09.07.1981)13 வயதில் கணித மேதை!

எந்தக் கணக்கையும் சில விநாடிகளில் விடை கண்டுபிடித்துக் கூறும் அதிசயத் திறன் படைத்த ராஜு சோமவாசி என்ற 13 வயது சிறுவன் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளான்.

News image
Updated On :7 ஜூலை 2015, 11:59 am

எந்தக் கணக்கையும் சில விநாடிகளில் விடை கண்டுபிடித்துக் கூறும் அதிசயத் திறன் படைத்த ராஜு சோமவாசி என்ற 13 வயது சிறுவன் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளான்.

கோலாப்பூரில் வசிக்கும் மனித கம்ப்யூட்டர் போல் இயங்கும் ராஜுவின் திறமையைச் சோதிக்க பல துறையினரும் ஆர்வத்துடன் வருகின்றனர்.

ஒருவர் தனது பிறந்த தேதி, மாதம், ஆண்டைக் கூறினால், உடனே அந்தத் தேதிக்கான கிழமையை ராஜு கூறிவிடுகிறான். சமீபத்தில் அதே கிழமையில் எப்போது பிறந்த தேதி வரும் என்ற விவரத்தையும் கணித்துக் கூறுகிறான்.

ஒரு பென்சிலும் காகிதமும் வைத்துக்கொண்டு எல்லா வகையான கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற கணக்குகளுக்கு விடை கூறுகிறான். இத்தனைக்கும் ராஜூ கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் தேறவில்லை. எனவே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டான்.

தனக்குள்ள திறமை பற்றி சமீபத்தில் அவனுக்குத் தெரிந்ததாம். அவனது கணிதத் திறமையை மெச்சி யாராவது பணம் கொடுத்தால், இதெல்லாம் நான் கேட்டேனா என்று கூறியவாறே அதை வாங்கிக்கொள்கிறான். தன் வருங்காலம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறான் இந்த இளம் கணித மேதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.