நூறு கோடி ரூபாயில் நிறைவேற்றப்படவிருக்கும் சத்துணவுத் திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.
சத்துணவுத் திட்டம் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தாம் படித்ததாகவும், நிதி அமைச்சர் அடுத்த பட்ஜெட்டை சமர்ப்பித்த பின்னர்தான் இந்தத் திட்டம் பற்றிய செலவினங்கள் தமக்குத் தெரிய வரும் என்றும் அவர் சொன்னார்.
தமிழ்நாடு மின்சார வாரியம், சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷன், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் உதவித் தொகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. அப்படியிருக்கையில் சத்துணவு திட்டத்துக்கும் நூறு கோடி செலவிடுவது என்பது சாத்தியமாகுமா என்பது பற்றி எதிர்காலம்தான் பதில் சொல்லும் என்று அவர் கூறினார்.
1985-ம் ஆண்டுக்கு முன்பாகவே தமிழக சட்டமன்றத்துக்கான அடுத்த பொதுத் தேர்தல்கள் வர வேண்டும் என்று தாம் விரும்பவில்லை என்றும், அப்படி வந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன் என்றும் அவர் கூறினார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் நடைபெறுவது என்பது ஒரு ஜனநாயகக் கணக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


