18-வது முறையாக புதிதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு தம் புதல்வர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று ஒரு விவசாயி புகார் செய்துள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த விவசாயிக்கு வயது 60 ஆகிறது. 30 வருடங்களில் இவர் 17 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
முன்னதாகச் செய்துகொண்ட 17 திருமணங்களிலும் மகிழ்ச்சி ஏற்படவில்லை, திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கான முயற்சியைக் கைவிட்டு விடவில்லை. தற்போது மற்றுமொரு திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும்போது, இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் சேர்ந்து தாக்கினர் என்று அந்த விவசாயி புகாரில் கூறியுள்ளார்.
எந்தவித இடையூறு வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார் அந்த விவசாயி.
இஸ்லாமிய சட்டப்படி ஒருவர் 4 பெண்களை திருமணம் செய்து வைத்துக்கொள்ளலாம். முதல் மனைவி எழுத்து மூலம் கொடுத்த உத்தரவை அடுத்தே ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசின் குடும்ப நலச் சட்டம் கூறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


