சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் ராஜாஜி மண்டபத்துக்கு மேல்புறம் ஒரு ஆலமரத்தின் அகன்ற தடிப்பகுதியில் தானாகவே உருவான விருட்ச விநாயகரின் வலது காலும் இடது காலும் வளர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த விருட்ச விநாயகர் 14 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலமரத்தில் தோன்றியது. முதலில் ஆலமரத்தின் அடியில் ஒரு பகுதி வளைந்து திரண்டிருந்தது. அதன் தடிப்பகுதி பக்தர்கள் கண்ணுக்குப் பிள்ளையார் வடிவமாகக் காட்சி தந்தது. அதைக் கண்டு வியப்புற்ற மக்கள் அதற்கு வழிபாடு செய்யத் தொடங்கிவிட்டனர். அந்த மரத்தின் தடிப்பகுதி நாளடைவில் பிள்ளையாரின் முழு உருவினைப் பெற்றது.
ஆலமரத்தின் அடியில் கனமான பகுதியில் தானாகத் தோன்றிய விருட்ச விநாயகருக்கு முதன்முதலில் கிரீடம் வைத்ததுபோல் தலை, தும்பிக்கை, வலக்காது, வலக்கையில் அங்குசம், இடக்கையில் பாசம் (கயிறு), வலப்பக்க இரண்டாவது கையில் உடைந்த துண்டுக் கொம்பு, முழுக்கொம்பு, கீழே பெருச்சாளி வாகனம் முதலியவை உருப்பெற்றன. ஓராண்டுக்கு மேல் ஒன்றரையாண்டுக்குள் வலக்கண்ணும் பின்னர் நான்கு மாதங்களில் இடக்கண்ணும், அதற்குப் பிறகு இடப்பக்க இரண்டாவது கையில் கொழுக்கட்டையும் தோன்றின.
1968-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி தோன்றிய இக்கோயிலுக்கு வருகிற 15-ம் தேதியுடன் 16 ஆண்டு நிரம்புகிற நிலையில் பிள்ளையார் ஏழு, எட்டு மடங்கு வளர்ந்திருக்கிறார். இப்போது வலது காலும், இடது காலும் வளர்ந்துகொண்டிருக்கிறது.
மரத்தை உள்ளடக்கி ஒரு பெரிய மேடை, மேல்புறத்தில் கீற்றுக்கொட்டகை ஆகியவற்றுடன் அமைந்துள்ள விருட்ச விநாயகர் கோயிலில் சிவபெருமான், முருகன், ஐயப்பன், அம்பாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பெருமாள், லட்சுமி முதலிய உருவங்களும் உள்ளன. இங்குள்ள சிவபெருமானுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து அபிஷேகம் நடந்துகொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


