இலங்கையில்இருந்து அமைதிப் படையை வாபஸ் பெற முன்று இந்தியா விரும்பியபோது, ஜனாதிபதி பிரேமதாசதான் அதைத் தடுத்ததாக பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.
இந்திய அமைதிப் படையை வாபஸ் பெறுவதில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு இலங்கையே காரணம் என அவர் குற்றம் சாட்டினார். இந்திய - இலங்கை ஒப்பந்தப்படியான பொறுப்புகளில் இருந்து இலங்கை பின்வாங்கிவிட முடியாது என்றார் அவர்.
இந்திய அமைதிப் படையால்தான், இலங்கை இன்னும் ஒன்றுபட்ட நாடாக இருக்கிறது என்று அவர் கூறினார், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்திய அமைதிப் படையை வாபஸ் பெற இந்தியா விரும்பியது. ஆனால் இலங்கைதான் அதை விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டில், இப் பிரச்னை குறித்து அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜயவர்த்தனாவுடன் தாம் பேசியதாகவும், தனக்கு அடுத்தபடியாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் பிரேமதாசவுடன் இது பற்றி விவாதிக்கும்படி அவர் கூறியதாகவும் ராஜீவ் காந்தி சொன்னார்.
ஆனால், எக்காரணம் கொண்டும் இந்தியப் படையை விலக்கிக்கொள்ளக்கூடாது என்று அப்போது பிரேமதாச கூறியதாகவும், இந்திய அமைதிப் படையை வாபஸ் பெறுவதற்கான கால அட்டவணை குறித்து விவாதம் நடத்துவது பற்றி பிரேமதாசவுக்கு தாம் எழுதிய கடிதங்களில் வற்புறுத்தி வந்ததாகவும், ஆனால் அவர் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதாகவும் ராஜீவ் காந்தி சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


