காவிரிப் பிரச்னை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கின் அடுத்த விசாரணைக்கு முன்பாக (அதாவது ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு முன்பாக) அனைவரும் ஏற்கக்கூடிய தீர்வு காணப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது -
மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது திமுகவின் தோழமைக் கட்சியான ஜனதா தளம் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தது. ஆனாலும்கூட கருணாநிதியால் காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.
20 ஆண்டுகளாக இப்பிரச்னை இருந்து வருகிறது. மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை மூலமோ வேறு வழிகளிலோ தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் எழுப்ப அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எல்லாவிதமான உரிமையும் உண்டு. இப்பிரச்னை தொடர்பாக இந்த ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை அவர் விலக்கிக்கொள்ள மாட்டார்.
காவிரிப் பிரச்னை காரணமாக இந்த ஆட்சிக்கு ஆபத்து எதுவும் வராது. இப்பிரச்னையைத் தீர்ப்பதில் பாஜக தலைமைக்கு எந்த அளவுக்கு அரசியல் உறுதி இருக்கிறது என்பதை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


