சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (27.07.1999)எல்லோரும் வாக்களித்தால் ஊழல் ஒழியும் - சி.சுப்பிரமணியம் நம்பிக்கை

அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்றால், எல்லோரும் வாக்களிக்க முன் வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

News image
Updated On :25 ஜூலை 2015, 9:30 am


அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்றால், எல்லோரும் வாக்களிக்க முன் வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

ஊழல் அதிகமாக உள்ள நாடுகளின் வரிசையில் முதல் 8 இடத்தில் இந்தியா உள்ளது. அரசியல் கட்சிகளைத் திருத்துவதற்கு உரிய சட்டம் அவசியம்.

18 வயதில் இருந்து 30 வயதுக்கு உள்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 60 சதவீதம். 45 சதவீத மக்கள் படித்தவர்கள். இவர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

கார்கிலில் ராணுவ வீரர்களில் எல்லையைக் காத்தார்கள். நாம் நாட்டு நலனுக்காக வாக்களிக்க வேண்டும். அதே சமயத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார் சி.சுப்பிரமணியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.