தமிழகத்தில் காங்கிரஸ் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டுவேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பின் தில்லியில் இருந்து முதன்முதலாக தமிழகம் வந்த அவருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது -
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 1967-க்கு முன்பு எப்படி செல்வாக்கோடு, பெருமையோடு, மதிப்போடு இருந்ததோ அதை மீண்டும் பெற்றாக வேண்டும். சோனியா காந்தி மீண்டும் பிரதராக வேண்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தொண்டர்கள் ஓய்வு, உறக்கமின்றி பாடுபட வேண்டும். தமிழக காங்கிரஸில் இனி கோஷ்டிகளுக்கு இடமில்லை. இனி ஒரே கோஷ்டிதான். அது காங்கிரஸ் கோஷ்டிதான்.
கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் தாற்காலிக அலுவலகத்தில் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட இளங்கோவன், வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவதுதான் எனது முதல் பணி. அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பதை சோனியாதான் முடிவு செய்வார் என்று சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


