நான்கு சவரன் எடையுள்ள, சுமார் 250 ரூபாய் பெறுமானமுள்ள தங்கச் சங்கிலியை வெறும் எட்டணாவுக்கு விற்ற பதினோரு வயது முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர் பேரக்ஸ் வாசியான ஸ்ரீ அப்துல் ஜபார் என்பவர் வீட்டில் இருந்து இந்தச் சங்கிலி களவாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வீட்டில் இருந்தவர்கள் பல வேலைகளில் மும்முரமாக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள் என்றும், அப்போதுதான் இந்த செயின் திருடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இக்களவு பற்றி ஓட்டேரி போலீஸாரிடம் உடனே புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, மேற்படி செயினை திருடியதாக ஓட்டேரியைச் சேர்ந்த மெஹபூர் பீபீ என்ற பதினோரு வயது முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டார். அவர், ஜார்ஜ் டவுன், நைனியப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஒரு மில் ஊழியரிடம் எட்டணாவுக்கு அந்தச் சங்கிலியை விற்றதாகத் தெரிந்தது. அந்த மில் ஊழியரிடம் இருந்து தங்கச் சங்கிலியை போலீஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பெண் ரிமாண்ட் செய்யப்பட்டாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


