பார்வையற்ற, காது கேளாத, வியாதி காரணமாக அங்கஹீனம் அடைந்த மாணவர்கள் உயர்தர கல்வி பயிலவும், தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெறவும், தொழில் பயிற்சி பெறவும் உபகாரச் சம்பளம் வழங்குவதென்று இந்திய அரசு தீர்மானித்துள்ளது.
1961-62-ம் கல்வி வருடத்துக்கு உபகாரச் சம்பளம் கிடைக்கும் என்றும், ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை படிப்பையும் பயிற்சியையும் பூர்த்தி செய்வதற்காக பிரதி வருடமும் உபகாரச் சம்பளம் தருவது புதுப்பிக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்களின் தந்தைகள் மாதம் ஒன்றுக்கு ரூ.1000-க்கு அதிகமாக சம்பாதிக்காதவர்களாக இருக்க வேண்டும். வியாதி காரணமாக அங்கஹீனமானவர்களுக்கு நடமாடு வதற்குத் தேவையான சாதனங்களை வாங்குவதற்கும் அவற்றைப் பராமரிக்கவும் போக்கு வரத்துக்காகவும் உபரியாக அலவன்ஸ் தரப்படும்.
ராஜ்ய சர்க்கார் அல்லது மத்திய சர்க்கார் அங்கீகாரம் செய்துள்ள எந்தக் கல்வி ஸ்தாபனம் அல்லது தொழில்நுட்ப கல்வி ஸ்தாபனத்திலும் இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படும். மற்றும் சர்வ கலாசாலையுடன் இணைக்கப்பட்ட ஸ்தாபனங்களிலும் ராஜ்ய சர்க்கார் அல்லது மத்திய சர்க்கார் அங்கீகாரம் செய்துள்ள தொழில் பள்ளிகள் அல்லது ஸ்தாபனங்களிலும் உபகாரச் சம்பளம் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

