தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(23.06.1964)ரூ.2000 செக் மோசடி - ஜவுளிக் கடையில் பேரம் நடத்தியவரை போலீஸ் தேடுகிறது

கோவையில் ஒரு கம்பெனிக்கு சொந்தமான செக்கில் பொய் கையெழுத்து போட்டு, பாங்கியில் இருந்து ரூ.2000 வாங்கிக்கொண்டு கம்பி நீட்டியதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸ் வலை போட்டு தேடி வருகிறது.

News image
Updated On :20 ஜூன் 2015, 7:27 am

கோவையில் ஒரு கம்பெனிக்கு சொந்தமான செக்கில் பொய் கையெழுத்து போட்டு, பாங்கியில் இருந்து ரூ.2000 வாங்கிக்கொண்டு கம்பி நீட்டியதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸ் வலை போட்டு தேடி வருகிறது.

அந்தக் கம்பெனி மேட்டுப்பாளையம் ரோடில் இருக்கிறது. செக்கில் பொய் கையெழுத்து போட்டு தனது பாங்கு கணக்கில் இருந்து யாரோ ஒருவர் ரூ.2000 வரை எடுத்துள்ளதாக அக்கம்பெனி போலீஸில் புகார் செய்துள்ளது.

இது சம்பந்தமாக போலீஸார் விசாரித்ததில் இருந்து தெரிய வந்துள்ளதாவது -

கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஜவுளி கடைக்குச் சென்று ஒரு நபர் ரூ.500 பெறுமான ஜவுளி வாங்கிக் கொண்டு அத்தொகைக்காக ரூ.2000-க்கு ஒரு செக்கை அந்தக் கடைக்காரரிடம் கொடுத்தாராம். அக்கடைக்காரர் உடனே அந்த செக்கை தமது ஆள் ஒருவரிடம் கொடுத்து பாங்குக்குச் சென்று மாற்றிவரச் சொன்னார். அந்த ஆள் சென்று செக்கை பாங்கில் கொடுத்து பணமாக மாற்றி வந்தார். கடைக்காரர் தமக்குச் சேர வேண்டிய ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு பாக்கியை அந்த நபரிடம் கொடுத்தார்.

அந்த செக் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கம்பெனிக்குச் சொந்தமானது என்றும், அந்த நபர் அந்த செக்கில் பொய்க் கையெழுத்திட்டிருக்கிறார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அப்துல் ஹமீது என்று அந்த நபர் தம்மை சொல்லிக்கொண்டாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.