சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (24.06.1965)தப்பி ஓடிய காவற்கைதியை போலீஸார் 6 மைல் துரத்திப் பிடித்தனர் - போகிற போக்கில் பல பொருள்களை அவன் திருடிச் சென்றானாம்...

விழுப்புரத்தில் சப் ஜெயிலில் இருந்து தப்பியோடிய காவற் கைதி கிருஷ்ணமூர்த்தி, திருக்கனூர் அருகே 6 மைலில் பிடிபட்டான்.

News image
Updated On :23 ஜூன் 2015, 10:49 am

விழுப்புரத்தில் சப் ஜெயிலில் இருந்து தப்பியோடிய காவற் கைதி கிருஷ்ணமூர்த்தி, திருக்கனூர் அருகே 6 மைலில் பிடிபட்டான்.

திருக்கனூரில் தமது உறவினர் வீட்டில் கிருஷ்ணமூர்த்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறையில் இருந்து தப்பியோடிய பிறகு இவன் சில பண்டங்களை திருடியுள்ளானாம். இவனது உறவினர்களிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன் ஹெட்கான்ஸ்டபிள் ஜனார்த்தனம், கான்ஸ்டபிள் வேலு இருவரும் பிடிக்கச் சென்றனர்.

போலீஸார் வருவதை அறிந்தவுடன் அவன் 6 மைல் தூரம் ஓடினான் என்றும், போலீஸார் துரத்தவே இவன் ஒரு கிணற்றுக்குள் பதுங்கிக்கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவனை இருவரும் பிடித்தனர்.

திருக்கனூர் அருகே உள்ள இடங்கள் மலைப்பாங்கான பகுதிகள். அவ்விடங்களுக்கு அவன் ஓடியிருக்கக்கூடுமானால் கண்டுபிடித்திருக்க முடியாதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.