இந்த நாளில் அன்று
(05.03.1956)
தெலுங்கானா - ஆந்திரா இணைப்பு: நேரு அறிவிப்பு
தெலுங்கானாவையும் ஆந்திராவையும் இணைத்து ஒரே ராஜ்யமாக அமைப்பதென இந்திய சர்க்கார் கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதாக பிரதம மந்திரி நேரு இன்று மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். தெலுங்கான மக்களின் அச்சத்தைப் போக்க தக்க பாதுகாப்புகள் இருக்கும் என்றார் அவர்.
இரு பிராந்திய கவுன்சில்கள் அமைக்கப்படும் என்றும், அந்தந்த பிராந்திய மக்களின் நல உரிமைகளைக் காப்பாற்ற பாதுகாப்புகள் இருக்குமென்றும் கூறினார். தெலுங்கானா மக்கள் இதை சுமுகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நேருஜி கேட்டுக்கொண்டார். பிராந்திய சபைகள் அந்தந்த பிராந்தியத்தின் கல்வி, அபிவிருத்தி நலன்களைக் கவனித்து வருமென்றும், மக்களுக்கு சர்க்கார் உத்தியோகங்கள் கிடைக்கும்படிச் செய்வதில் அவை தக்க பாதுகாப்புகளை ஏற்படுத்துமென்றும் நேருஜி கூறினார்.
இரு ராஜ்யங்களாகவே இருப்பதா அல்லது ஒரே ராஜ்யமாக அமைப்பதா என்பதைப் பற்றி நீண்ட ஆலோசனைக்குப் பின்தான் இணைப்பதென்ற முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் செய்த பிறகு விசால ஆந்திர ராஜ்யத்தை ஆதரித்தோரும் சரி, தெலுங்கானா ராஜ்யத்தை ஆதரித்தோரும் சரி, தீர்மானத்தை செயலாற்றப் புக சம்மதித்தனர். இப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார் நேருஜி.
---
ஆந்திரா - தெலுங்கானா ராஜ்யங்களை இணைக்க இந்திய சர்க்கார் முடிவு செய்திருப்பதாக பிரதம மந்திரி நேரு அறிவித்த செய்தியைக் கேட்டதும், ஆந்திர முதல் மந்திரி ஸ்ரீ பி.கோபால ரெட்டியும், உதவி முதல் மந்தி ஸ்ரீ என்.சஞ்சீவ ரெட்டியும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானாவின் நலவுரிமைகள் முழு அளவுக்குப் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதிகளை மீண்டும் இருவரும் ஊர்ஜிதம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

