சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(09.03.1961)இலங்கையில் மீண்டும் மொழி கலவரங்கள் தலைதூக்குமா?

சிங்களத்தை ஆட்சி மொழியாக்கியிருப்பதை ஆட்சேபித்து வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சி (பெடரல் கட்சி) ஆரம்பித்துள்ள கிளர்ச்சி, இலங்கையில் சிங்கள மொழி பேசப்படும் மாகாணங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வழி வகுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

Updated On :9 மார்ச் 2015, 5:00 am

இந்த நாளில் அன்று

(09.03.1961)

இலங்கையில் மீண்டும் மொழி கலவரங்கள் தலைதூக்குமா?

சிங்களத்தை ஆட்சி மொழியாக்கியிருப்பதை ஆட்சேபித்து வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சி (பெடரல் கட்சி) ஆரம்பித்துள்ள கிளர்ச்சி, இலங்கையில் சிங்கள மொழி பேசப்படும் மாகாணங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வழி வகுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

எதிர் தரப்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க ஜடிக விமுக்தி பெராமுனா (சிங்கள தேசீய விடுதலை முன்னணி) தலைவர் ஸ்ரீ கே.எம்.பி.ராஜரத்னே தொண்டர்கள் படையொன்றை திரட்டியிருப்பதாக மாலைப் பத்திரிகை ஒன்று கூறியிருக்கிறது.

சிங்களப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளையும் ஸ்தாபனங்களையும் அமைதியான முறையில் பகிஷ்கரிக்கும் தன்மையில் அது இருக்குமாம்.

தமது உத்தேச இயக்கத்தை ஆதரிக்க இப்போது  5000 தொண்டர்கள் தயாராயிருப்பதாக ஸ்ரீ ராஜரத்னே கூறியதாக பத்திரிகை தெரிவிக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.