இந்த நாளில் அன்று
(11.03.1963)
தூத்துக்குடி உர ஆலைக்கு லைசென்ஸ் ரத்தாகலாம் - அரசாங்கமே அதை நிறுவக்கூடும்
லைசென்ஸ்தாரர்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்காத ஆலைகளை மத்திய சர்க்காரே நடத்துவது என்ற யோசனையின்படி தூத்துக்குடி, மங்களூர், துர்க்காபூரில் நிறுவ உத்தேசிக்கப்படும் புதிய உரத் தொழிற்சாலைகள் பாதிக்கப்படக்கூடும்.
தூத்துக்குடி, மங்களூர் ஆலைகளுக்கு இரு தனியாரக்ளகுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. துர்க்காபூர் ஆலையை நிறுவ மேற்கு வங்க சர்க்கார் உத்தேசிக்கிறது. மூன்றாவது திட்ட இலக்கான எட்டு லட்சம் டன் உர உற்பத்தியை அடைவதற்கு வேறு வழி இல்லாததால் இத் தொழிற்சாலைகளை தாங்களே நடத்த மத்திய சர்க்கார் யோசிக்கின்றனர்.
லைசென்ஸ்தாரர்களின் தயக்கத்துக்குப் பிரதான காரணம், விலை விஷயத்தில் சர்க்கார் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு எனத் தோன்றுகிறது. அமோனியம் சல்பேட், யூரியா விலைகளை மட்டும் சர்க்கார் நிர்ணயிப்பதால், வேறு ரக உரங்களைத் தயாரிக்க புதிய தொழிற்சாலைகள் விரும்புகின்றன. எதிர்காலத்தில் அதன் விலையை கட்டுப்படுத்த சர்க்கார் முயலக்கூடாதென அவை நிபந்தனை போடுகின்றன. விவசாயிகள் மேலும் மேலும் உரங்களை நாடுவதால் புதிய உரத்தையும் (அமோனியம் பாஸ்பேட்) விற்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.
அவ்வாறு உறுதிமொழி கூற சர்க்கார் விரும்பவில்லை. அநியாய நிபந்தனைகளுக்கு உட்படுவதைவிட சர்க்கார் துறையில் இத் தொழிற்சாலைகளை மேற்கொள்வது நல்லதென அரசாங்கம் கருதுகிறது.
விசாகப்பட்டினம் தொழிற்சாலையை அமைப்பதில் யு.எஸ்.ஸை சேர்ந்த ஒரு ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளுக்கும், உருக்கு கனரகத் தொழில் இலாகா அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

