இந்த நாளில் அன்று
(16.03.1968)
மொழிப் பிரச்னையில் நிதானம் இழக்கலாகாது - ஸ்ரீ காமராஜ் வேண்டுகோள்
குறுகிய காலத்தில் சமுதாயத்தை மாற்ற சோஷலிஸப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமாமால் இளைஞர்களும் மாணவர்களும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்ரீ காமராஜ் கூறினார்.
சட்டக் கல்லூரியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஸ்ரீ காமராஜ், சமுதாயத்தை சோஷலிஷப் பாதையில் அழைத்துச் செல்வதை விரும்பாத சிலர் ஜாதி, மத, மொழி உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும், இதற்கு இளைஞர்கள் பலியாகிவிடக்கூடாது என்றும் சொன்னார்.
ரயில்களை நிறுத்துவது போன்ற செயல்கள் அன்னியர் நம்மை ஆண்ட காலத்தில் பொருத்தமாக இருந்தது. இப்பொழுது அந்த முறை தேவையில்லை என்று அவர் சொன்னார். நாட்டை வழி நடத்திச் செல்ல வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மொழிப் இரச்னை பற்றி குறிப்பிட்டு ஸ்ரீ காமராஜ் கூறியதாவது:
மத்திய சர்க்காரில் உள்ளவர்கள் ஒரு மொழிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றாதபடி நடந்துகொள்ள வேண்டும். மொழிப் பிரச்னையில் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. நம் நாடு ஒரே நாடாக இருக்கவேண்டுமானால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். எந்தச் செயலிலும் ஒரு பிரதேசத்துக்கும், மற்றொரு பிரதேசத்துக்கும் சாதக பாதகம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய சர்க்காரின் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

